காலை பகல் மாலை எந்த நேரமேனும்
kaalai pagal maalai endha neramenum
1. காலை பகல் மாலை எந்த நேரமேனும் அன்பின் விதைகளை விதைத்திடுவோம் அறுப்புக்குக் காத்து தக்க வேளை பார்த்து அரிகள் சுமந்து பாடி வருவோம்.
பல்லவி
பாடி வருவோம் பாடி வருவோம் அரிகள் சுமந்து பாடி வருவோம்.
2. கோடை பனி மாரி எந்தக் காலமேனும் கானல் குளிர் ஒன்றுக்கும் ஒதுங்கிடோம். அறுப்பு முடிந்து வேலை நிற்கும் போது அரிகள் சுமந்து பாடி வருவோம்.
பல்லவி
பாடி வருவோம் பாடி வருவோம் அரிகள் சுமந்து பாடி வருவோம்.
3. கஷ்டம் நஷ்டம் துன்பம் என்ன நேரிட்டாலும் கண்ணீருடன் கர்த்தருக்கு விதைப்போம் கர்த்தர் நம்மை நோக்கி துக்கம் நீக்குவதால் அரிகள் சுமந்து பாடி வருவோம்.
பல்லவி
பாடி வருவோம் பாடி வருவோம் அரிகள் சுமந்து பாடி வருவோம்.