காலை ஒளி தோன்றவே
kaalai oli thondravae
காலை ஒளி தோன்றவே காரிருளும் நீங்கவே கர்த்தர் வந்து கன்னியை வீடு சேர்ப்பார் தேவ வாசம் நம்முடன் புது எருசலேமிலே கண்ணீர்யாவும் துடைப்பார் காலை வேளை
அல்லேலூயா முகமுகமாய் காணலாம் பூவில் ஓடி முடித்த பின் அல்லேலூயா காண்போம் அவர் கிருபையால் அல்லேலூயா
கண்ணிமைப் பொழுதிலே காசினி விட்டேகுவோம் காகளம் தொனிக்குமே அல்லேலூயா கரை சேர்வோம் கடைசியாய் பயம் துக்கம் போகுமே ஆளுவோம் இயேசுவுடன் அல்லேலூயா
ஆட்டுக்குட்டி சீயோனில் கூட்டர் பரிசுத்தர் தான் நெற்றியில் இருப்பது தேவநாமம் கூட்டமாய் சேர்ந்தவர் புதுப்பாட்டு பாடுவார் முதற் பலன் இவர்களே அல்லேலூயா
சந்தோஷ கீதங்களோடே சந்தோஷிப்போம் நாமெல்லோரும் மைந்தன் மண நாளதில் அல்லேலூயா மகிமை ராஜ்யங்களில் தரித்து வெண்மை வஸ்திரம் போரில் வென்றோர் வாழுவோம் அல்லேலூயா