காலை மாலை நேரத்தில்
kaalai maalai nerathil
காலை மாலை நேரத்தில் கர்த்தர் இயேசு பாதத்தில் - 2 கருத்தாய் ஜெபித்திடுவேன் நாம் என் நேரமும் துதித்திடுவோம் -2
ஆர்ப்பரிப்போம் ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோமே இயேசு நாமம் சொல்லி சொல்லி துதித்திடுவோமே - 2
1. கூப்பிடும் யாவருக்கும் இயேசு அருகில் இருப்பாரே - 2 விடுதலை தந்திடுவார் புது பெலத்தால் நிரப்பிடுவார் - 2
2. துயரங்கள் நீக்கிவிடுவார் ஆறுதல் அளித்திடுவார் - 2 கவலையை மாற்றிடுவார் அவர் கரத்தால் அணைத்திடுவார்-2
3. இயேசுவை நோக்கி பார்த்து பிரகாசம் அடைந்தேனே - 2 வெட்கம் எனக்கில்லையே எந்தன் நெருக்கங்கள் மாற்றினாரே