காலடி தெரியாமல்
kaaladi theriyaamal
காலடி தெரியாமல் போனாலும் கர்த்தர் என் முன்னே உண்டு – 2 சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார் நம்பி நான் முன் செல்லுவேன் – 2
இயேசுவை நம்புவேன் நாளெல்லாம் நான் பின்பற்றுவேன் என்னை அவரிடம் ஒப்படைத்தேன் வெட்கப்பட்டு போகமாட்டேன் – 2
1. வனாந்திரமே வாழ்க்கையானாலும் கர்த்தர் என் பக்கம் உண்டு – 2 வேண்டியதை அவர் பார்த்துக்கொள்வார் நம்பி நான் முன் செல்லுவேன் – 2
2. இங்கே நான் பரதேசியானாலும் அங்கே ஓர் இடமுண்டு – 2 ஆயத்தமாக்கி அழைத்து செல்வார் நம்பி நான் காத்திருப்பேன் – 2