காக்கும் கர்த்தர் இயேசு
kaakkum karthar yesu
காக்கும் கர்த்தர் இயேசு எனக்குண்டு கன்மலை நீர் எந்தன் புகலிடமே (2) கலக்கமோ தயக்கமோ என்னில் இல்லை கன்மலை மறைவினில் இளைப்பாறுவேன்
1. நேசிக்க யார் என்னை மறந்தாலும் நேசிக்கும் தந்தைu நீர் எனக்குண்டு (2) தோளின்மேல் சுமந்து என்னை காப்பீர் தொழுதிடுவேன் தினம் உம் நாமத்தை (2)
2. மெய் அன்பிற்காய் உள்ளம் ஏங்கும் போது பொய் அன்பால் உள்ளமே சோர்ந்த வேலை (2) மெய் அன்பை உந்தன் குருசில் கண்டேன் என் சிரம் தாழ்த்தியே பணிந்திடுவேன் (2)
3. நோயினால் சரீரம் ஒடுங்கும் வேலை நோய் சுமந்த நேசர் உம்மை கண்டேன் (2) சுகமான வாழ்வு பெற்றிட்டேன் நான் சுவிசேஷம் அறிவிப்பேன் வாஸ்நாளெல்லாம் (2)
4. கைக்கொடுப்பேன் என்று சொன்னோர் எல்லாம் கைவிட்டு விலகியே நின்ற வேலை (2) கரம் பிடித்து தாங்கினாரே கனிவுடன் தூயனை துதித்திடுவேன் (2)
5. மண்ணில் நான் என்றும் பரதேசியே விண்ணில் நான் பரலோக வாசியல்லோ (2) பொற் கரம் பற்றியே நடப்பேன் பொன் நகரில் உம்முடன் என்றுமே (2)