காக்க வல்ல கர்த்தர் உண்டு
kaakka valla karthar undu
காக்க வல்ல கர்த்தர் உண்டு நம்மை என்றும் காக்க காத்திடுவார் உன்னை என்னை வல்லமையின் கரத்தால் - 2
துதிகளினால் அவர் நாமத்தை உயர்த்திடுவோம் காத்திடுவார் - 2 எரிகோ எம்மாத்திரம் - அல்லேலூயா
விசுவாசத்தால் தாவீதைப் போல் துணிந்து சென்றால் ஜெயம் தருவார் கோலியாத் எம்மாத்திரம் - அல்லேலூயா
அவர் சொற்படி முன்சென்றால் சமுத்திரமும் வழி தருமே - 2 செங்கடல் எம்மாத்திரம் - அல்லேலூயா
அவர் ஜனத்தை மீட்கும்படி வாதைகளை அனுப்பிடுவார் பார்வோன் எம்மாத்திரம் - அல்லேலூயா