காது குளிரப் பாடுங்கள் கிருபா சத்தியம்
kaadhu kulirap paadungal kirubaa sathiyam
1. காது குளிரப் பாடுங்கள் கிருபா சத்தியம்; புத்தி தெளியக்காட்டுங்கள் திவ்விய வசனம் வெல்க! சத்திய வேதம் வாழ்க! நித்திய வேதம். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்.
2. நல்ல செய்தியைக் கூறுமே கிருபா சத்தியம் பாவநாசத்தைக் காட்டுமே திவ்விய வசனம்; வான வருஷ மாரி ஞான பொக்கிஷ வாரி. அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்.
3. வேதநாயகர் பொழியும் கிருபா சத்தியம்; ஜீவ மங்கள மொழியும் திவ்விய வசனம்; யேசு எந்தனைப் பாரும் நித்தம் எந்தனைக்காரும். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம். அமிர்தமே! அற்புதமே! திவ்விய சத்தியம்.