ஜெயித்திடும் இயேசு சேனை வீரர்
jeyithidum yesu senai veerar
ஜெயித்திடும் இயேசு சேனை வீரர் வெற்றி என்றும் அளித்திடுவார் மளயாய் இயேசுவுக்குள் வாழும் யாவருக்கும் என்றும் வெற்றி அளித்திடுவார்
வெற்றி வெற்றி என்று ஆர்ப்பரிப்போமே அல்லேலூயா என்றும் வெற்றியே
ஆவியின் பட்டயத்தால் அழித்திடுவோம் அனைத்தையுமே அச்சமில்லை தோல்வியில்லை என்றும் வெற்றி உண்டே
ஆவியின் பெலத்தினால் அரண்களை அழித்திடுவோம் தேவ மக்கள் யாவருக்கும் என்றும் வெற்றி உண்டே
சிங்கம் போல சத்துரு சீறியே வந்திடினும் இயேசுவின் நாமத்திலே என்றும் வெற்றி உண்டே
தேவனையே சார்ந்திடுவோர் பயப்படத் தேவையில்லை இயேசுவின் இரத்தத்திலே என்றும் வெற்றி உண்டே
ஆயிரங்கள் எதிர்த்தாலும் ஆண்டவரே அழித்திடுவார் இயேசுவின் சேனையிலே என்றும் வெற்றி உண்டே