ஜெயத்தின் கீதம்
jeyathin geedham
ஜெயத்தின் கீதம் பாடிடுவோம் சீர் புது சாலேமின்
தேவன் நம்மோடு வாசஞ்செய்வாரே திருக் கரத்தால் துயர் துடைப்பார் துக்கமில்லை துன்பமில்லை துதியின் கானமே தொனித்திடுமே - ஜெய
இரத்தினக் கல்லைப் போல் ஒளி வீசும் இரா காலமில்லா இன்ப நகரில் ஈராறு முத்து வாசல்களுண்டே இதுவே மணவாட்டியாம் சபையே - ஜெய
சந்திர சூரியர் வேண்டுவதில்லையே சர்வ வல்ல தேவ மகிமையுண்டதிலே சுந்தர ஆட்டுக்குட்டியும் விளக்கே சந்ததம் ஆலயமுமிவரே - ஜெய
அப்போஸ்தலரின் பன்னிரு பேர்கள் அஸ்திவாரத்தின் கற்களிலுண்டே ஒப்பில்லா இயேசு மூலைக்கல்லாகி இசைத்ததினால் விலையேறப் பெற்றோர் - ஜெய
தீட்டும் திருடும் தீச் சொல்லும் தீங்கும் திளைத்தவர் அதினுள் கடந்திடுவாரோ தேவாட்டுக் குட்டியின் ஜீவாகமமதில் நாமமுள்ளோரே அதில் நடப்பார் - ஜெய
தாகமுள்ளேரே வருவீரே ஜீவ தண்ணீர் ஊற்றி பெருகி மகிழவே ஜெயிப்போரே யாவும் சுதந்தரிப்பாரே தேவனின் புத்திரராகிடுவார் - ஜெய