ஜெயமே ஜெயமே ஜெயம்
jeyamae jeyamae jeyam
ஜெயமே ஜெயமே ஜெயம் அல்லேலூயா கிறிஸ்து எழுந்தார் உயிர்த்தெழுந்தார் சாவை வென்று எழுந்தார்
1. மரணத்தின் கூர் அடித்தே பாதாளத்தின் சிறை அழித்தே அழிவில்லா தேவ குமாரன் உயிர்த்தெ எழுந்தனர் ஆர்ப்பரிப்போம் - ஜெய
2. மரணம் இல்லை யவர்க்கே பரிகரித்தனர் சாவினையே மரண பயமென்பதில்லையே இனியும் பரண் உயிர்த்தெழுந்ததில் - ஜெய
3. மகிமையின் ஆவியினால் கிறிஸ்தேசு உயிர்த்ததினால் தாழ்ச்சையுறும் என் சரீரத்தினை விண் மாட்சியாய் மாற்றிடுவார் - ஜெய
4. நித்திய நம்பிக்கையால் திரையேகிடச் செய்திடுவார் ஆத்தும் நங்கூரமே எந்தன் வாழ்வில் ஜெயித்தோர் சிங்காசனமே - ஜெய
5. மகிமையுறும் சபையாய் மகிழ்ந்தே தம்முன் நிறுத்திடவே மணவாளன் இயேசுவே தோன்றுகையில் மறைந்தேகுவார் அவர் சுத்தரே - ஜெய