ஜெயமே இரத்தத்தால் ஜெயமே வருமே
jeyamae irathathaal jeyamae varumae
ஜெயமே இரத்தத்தால் ஜெயமே வருமே இயேசுவால் வருமே
சத்துருவின் சேனை வெள்ளம் போல வந்தாலும் மித்துருவாய் மாற்றிடும் தேவனவர் பாவி நம்மையே இரட்சித்திடவே ஆவியானவர் வந்து கொடியேற்றுவார்
சத்தியமென்னும் கச்சையும் நீதியென்னும் கவசமும் ஆயத்தமாம் பாதரட்சை தரித்திடுவோம் விசுவாசமாம் கேடகத்தோடே இரட்சண்ணிய தலை சீரா அணிந்திடுவோம் -ஜெ
திகையாதே நான் உன் தேவன் என்ற வாக்கை நினைத்தே திருவாய் மலர்ந்தென்னை தேற்றினாரே திசையறியாது தியங்கிடும் போது தீபமாக வந்து என்னை உயர்த்தினாரே
ஊற்றுண்ட தைலமாம் இயேசுவின் நாமத்தில் உலகத்தின் சக்திகளை ஜெயித்திடுவேன் ஊக்கத்தோடே நான்ஜெபித்திடுவேன் உண்மை தேவன் என்னோடே வழி நடப்பார்