ஜெயஜீவியம் கண்டோம்
jeyajeeviyam kandom
ஜெயஜீவியம் கண்டோம் இயேசுவிலே விசுவாசத்தால் இப்பாரை முற்றும் வென்றிடுவோம் எத்தோல்வி என்பதே எனக்கு இல்லையே எந்நாளும் ஜெயகீதம் பாடிப்பாடி சென்றிடுவோம்
1. ஜெயித்து நாம் சுதந்தரிப்போம் யாவும் அவர் வார்த்தை போலவே மறைவுள்ள மன்னா புசித்துமே நிறைந்த ஜெயஜீவியத்தில் ஆட்சி செய்வோம்
2. ஜெயித்து நாம் தம் ஆலயத்திலே ஜெய கெம்பீர தூணாக தீருவோம் நம் தேவ நாமும் தன் நாமம் தம் திவ்ய நகர நாமம் ம் பெற்று இலங்குவோம்
3. ஜெயித்து நாம் நல்லாட்சி செய்வோம் ஜாதி ஜனங்கள் மீதி லென்றுமே திறந்த வாசல் உண்டு நமக்கு சிறந்த ஜீவியம் எந்நாளும் செய்துயர்ந்திட
4. ஜெயித்து நான் தரித்திடுவோமே ஜெயித்தார் வெண் வஸ்திரம் சிங்காசனம் சுதந்தரிப்போம் சீர் மிகு தேவனோடு வீற்று ஆட்சி செய்வோமே
5. ஜெயிப்பவர் ஆண் மகனாக உயருவார் தேவ சமூகமே இத்தூயருக்காய் இயேசு தோன்றுவார் இரவில்லாத நாட்டில் சூரிய சோபையாகுவார்