ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவே
jeya raaja kodi etrik kaattavae
1. ஜெய ராஜ கொடி ஏற்றிக் காட்டவே அமராடச் செல்லுவோம். வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவே பூரிப்போடு பாடுவோம். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய்.
2. எதிர் சேனை சீறிப் பாய்ந்தோடினும் ராஜ கொடி காட்டுவோம்! திரளான கூட்டம் தடுத்திரைந்தும் வெற்றி சிறந்தேறுவோம். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய்.
3. எந்த தேச ஜாதி பாஷைக்காரரும் சுவிசேஷம் கேட்கையில் யேசு நாதர் ஜெய கோலம் வரவும் மா சமீப மாதலால். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய்.
4. அந்த நல்ல காலம் வந்தவுடனே ராஜரீகம் பண்ணுவார். அவபக்தி யாவும் ஒழிந்திடவே நீதிமுறை நாட்டுவார். செல்லுவோம் - வெல்லுவோம் நம் யேசு நாதர் மூலமாய் வெற்றி சிறப்பார் - ஆளுவார் பூமி எங்கும் ஜோதியாய்.