ஜெய ஜீவியமே
jeya jeeviyamae
ஜெய ஜீவியமே ஆ ஆ அற்புதமே இயேசுவில் கண்டடைந்தேன் - நானே தந்ததோர் ஜெயமே இந்த கானகமே தம் கிருபை தனமே
1. பாசமுற உம்மில் வென்றோர் உயர்த்தும் மாசறு ஜெயக்கொடியே நேசுறவே கேட்கும் ராஜனின் தொனியும் தேசுற ஏறுதன்னில் - ஜெய
2. மாமிசமேயிதை சேவித்திடவே பார்மிசை கடனாளியோ மா தூய இரத்தத்தால் கொண்டவரவர்க்கே மாத்திரம் சொந்தமே நான் - ஜெய
3. தாழ்த்தியே மேற்கொள்ளும் வல்லமை யனைத்தும் கீழ்ப்படுத்தும் செயலை சாவினை அறவே பரிகரித்து காவினில் தரும் ஜெயமே - ஜெய
4. சாலேமை சூழ்ந்துமே நிற்கும் மலைகள் போலவர் கிருபைகளே சோதனையில் வழுவாதென்னை ஜெயமாய் சேர்க்கும் சிங்காசனமே - ஜெய
5. தாகம் உள்ளோர் நீர் ஜீவ நதியில் ஏகமாய் பருகிடுவீர் ஆகவே தம் ஜெயம் உம் உரிமையதாய் வேகமாய் விரைந்திடுவீர் - ஜெய