ஜெய கீதம் பாடிடுவோம்
jeya geedham paadiduvom
ஜெய கீதம் பாடிடுவோம் மீட்பின் நாள் இதோ வருவதால் துன்பத்தை சகிக்கும் சபை இன்ப வீட்டில் சேர்க்க மா நேசர் வாறார்
ஆனந்தம் கொள்ளும் இயேசு சபையே அதிவேகம் வாறார் மாநேசர்
சகித்திடுவாய் உன் துன்பமெல்லாம் சீக்கிரம் உன் துன்பம் ஒழிந்திடுமே சோர்ந்திடாய் அவர் சபையே மேகமீதில் அவர் உயர்த்திடுவார்
நேச மீட்பர் நீர் வருவீர் அந்நாளில் என்னுள்ளம் பொங்கிடுமே அழகுள்ள உம்முகத்தை ஆனந்தக் களிப்புடன் தரிசிப்பேன்
வா என்று அவர் அழைப்பார் அவருடன் செல்ல நீ ஆயத்தமா ஆவியும் திருச்சபையும் வாரும் வாரும் என்றழைப்பார்
அல்லேலூயா அல்லேலூயா திரித்துவ மூவரையும் துதிப்போமே அல்லேலூயா அல்லேலூயா சதாகாலமும் பாடிடுவோம்