ஜெகமதில் உதித்த ஜெய
jegamadhil udhitha jeya
ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே நரர்சேயர்கள் துதித்திடும் திருவடியே - 2
பாரில் பரனாக நீரே - பாவிகட்காய்ப் பலியானீர் அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே - 2
1. பாவயிருள் நீக்கப் பாரினிலே - பரன் பாவிகள் பாவம் போக்க பலியானீரோ? சாபத்தை முற்றும் தொலைத்திடவே - சக்தியாக உயிர்திட்டிரோ - 2 அரூபா சொரூப அற்புதரே ஆனந்த பொற்பரனே - 2
2. எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ - நீர் என்தனின் சிறப்பான தாரகமே அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே - 2
3. ஏழையென்னில் தாகம் கொண்டதாலே – எழில் ஏகனே எனக்கு திவ்யாகாரமே தாகமிஞ்சி வாடுகிறேன் தேவா - சோகமானேன் இத்தாரணியில் - 2 காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கன்னியரில் காதலரே (கர்த்தராம் இயேசுவை போல்) - 2
4. எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் - அண்ணல் இயேசுவே இன்பமாக மா தேவனே (மணாளனே) கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமனே என்றழைக்கும் சத்தம் - 2 கேட்கும் கீதம் ஆ ! இன்பமே கூறிடாயோ அன்பரே - 2