ஜீவிய சுக யாத்ரையில்
jeeviya suga yaathraiyil
ஜீவிய சுக யாத்ரையில் கஷ்டங்களோ நஷ்டங்களோ கிறிஸ்துவண்டை வாராயோ - இயேசு ( 2 )
பகலில் பறக்கும் அம்புகட்கும் இருளின் கொள்ளை நோய்க்கும் இனிவரும் காலத்தின் இடறலுக்கும் இயேசுவை தேடாயோ அவர் வாக்கை நீ நாடாயோ
கரடுமுரடான பாதையோ கலக்கங்கள் குழப்பங்களோ விளங்காத புதிரோ வேதனையோ வல்லவரைத்தேடு - இயேசு நல்லவர் தான் நாடு
பலகோடி மக்கள் வாடுகின்றார் பரமனின் அன்பறியாமல் நிலையில்லா வாழ்க்கையின் சிற்றின்பத்தால் நிம்மதியை இழந்து - இயேசு சந்நிதியை மறந்து