ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
jeevanulla naatkal ellaam
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை பாடுவேன் என் ஜீவனுள்ள நாட்கள் எல்லாம் உம்மை போற்றுவேன் - 2
அல்லேலூயா ஆனந்தமே - 2
என் நேசரோ வெண்மையும் சிகப்புமானவர் என் நேசரோ தலைதங்க மயமானவர். - 2
பல்லவி
நீரே என் தேவன் நீரே என் ராஜா - 2 (என் ஜீவனுள்ள )
என் கால்கள் சறுக்கும்போது என்னை பாதுகாத்தீரே உம் கிருபையால் என்னை என்றும் தாங்குகின்றீரே - 2
பல்லவி
நீரே என் தேவன் நீரே என் ராஜா - 2 (என் ஜீவனுள்ள )
என் உள்ளத்தில் வேதனைகள் பெருகும் வேளையில் உம் ஆறுதல் என் ஆத்துமாவை தேற்றுகின்றதே- 2
பல்லவி
நீரே என் தேவன் நீரே என் ராஜா - 2 (என் ஜீவனுள்ள )