ஜீவனின் ஊற்றாம் ஜீவிக்கும்
jeevanin ootraam jeevikkum
ஜீவனின் ஊற்றாம் ஜீவிக்கும் தேவன் ஜீவனை தந்தார் ஜீவிக்கவே தீமையை வென்றால் நல்லின்பம் காண்பாய் தூய தேவனிடம் ஓடி வந்தால்
வஞ்சிக்கும் லோகம் உன்னைக் கெடுக்கும் தஞ்சம் வேறில்லை இயேசு வல்லால் கொஞ்ச நாள் உண்டு தள்ளிடாதே நீ இயேசுவின் அன்பு அழைக்கின்றதே
கல்வாரி காட்சி உள்ளம் உருகும் கல்மனம் மாற்றும் கண்ணில் கண்டால் கல்லான மனதை உடைக்கும் தியாகம் சொல்லான்னா நன்மைகள் செய்திடுமே
கால் கரம் காயம் விலாவில் நின்றும் பாயுது ரத்தம் உன் பாவத்தினால் மாசற்ற அன்பால் மீட்டிட உன்னை வாவென்று அழைக்கும் தேவனை பார்