ஜீவனின் அதிபதியே
jeevanin adhibadhiyae
ஜீவனின் அதிபதியே உயிர்த்தெழுந்தாரே மரணத்தை கொன்றார் சாத்தானை வென்றார் கல்வாரி சிலுவையிலே
ஆராதனை - 7 இயேசுவுக்கே
1. பூமி அதிர்ந்ததே கல்லறை பிளந்ததே சரித்திர நாயகன் மூன்றாம் நாள் உயிர்த்தாரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே
2. பூட்டின அறையிலே பயங்கள் நீக்கினாரே அன்பின் அடையாளமாய் தரிசனமானாரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே
3. நம்மை மீட்டவர் மறுபடி வருவாரே மறுரூபம் ஆக்கியே மகிமையில் சேர்ப்பரே சொன்னதை செய்தார் செய்வதை சொன்னார் வாக்கில் வல்லவரே