ஜீவனைப் பார்க்கிலும் உம்
jeevanaip paarkkilum um
ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை நல்லது ஜீவனுள்ள மட்டும் பாடுவேன் உம் கிருபையை ஜீவனைப் பார்க்கிலும் கிருபை இயேசுவே உம் கிருபையே ஓ…. இயேசுவே உம் கிருபையே
உதடுகளால் உம்மை உயர்த்துவேன் பரிசுத்த உள்ளத்தோடு பாடுவேன் பரிசுத்த கரங்களால் போற்றுவேன் பாடிடுவேன் எந்நாளுமே
வானாந்திரமான வாழ்க்கையில் சத்துருக்கள் என்னை தொடர்கையில் தனிமையில் வாழ்ந்து தவிக்கையில் நேசித்தவர்கள் வெறுக்கையில்
பிரானனை அழிக்க தேடுவோர் பட்டயத்தால் வீழ்ந்து போவார்கள் பாடுகள் என்னைத் தொடர்ந்தாலும் ஆத்துமா தொடர்ந்தும்மை பற்றிக்கொள்ளும்
படுக்கையில் உம்மை நினைக்கையில் பரவசத்தோடு உம்மை தியானிக்கிறேன் நீர் என் துணையாய் இருப்பதால் சற்றே உன் நிழலில் களிப்புறுவேன்