ஜீவநதி வருகிறது என்னை
jeevanadhi varugiradhu ennai
ஜீவநதி வருகிறது என்னை நோக்கி ஜீவநதி வருகிறது பரலோகத்தின் சிங்காசனத்தினின்று ஜீவநதி வருகிறது அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
1. ஜீவாதிபதி அவரே எந்தனுக்காய் ஜீவன் தந்தாரே ஜீவன் பெற்றிட ஜீவன் வளர்ந்திட ஆத்ம நேசர் அருள் செய்தாரே
2. ஜீவகனி மரங்களுண்டே நதியோரம் ஜீவகனி மதுரமாமே ஜீவ ஊற்றிலே தாகம் தீர்ந்து மகிழ்ந்திட ஜீவ பாதை திறந்திட்டாரே
3. ஜீவ புஸ்தகத்தில் என் பெயரையும் கிருபையாய் எழுதினாரே ஆணி பாய்ந்திட்ட கரங்கள் கண்ணீரை ஆனந்தமாய் ஊற்றிடுவேனே