ஜீவன் தந்து அன்பு
jeevan thandhu anbu
ஜீவன் தந்து அன்பு கூர்ந்த தேவா என் ஜீவனுள்ள நாள் வரை நன்றி – 2 இயேசுவே நன்றி – 4
1. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர் இரட்சிப்பால் அலங்கரித்தீர் – 2 உம்பிள்ளையாய் மாற்றினீர் உம்மோடு வைத்துக்கொண்டீர் – 2
2. தேடிவந்த தெய்வம் நீரே – என்னை தேற்றி நடத்துகிறீர் – 2 என்னைக் காக்கும் தெய்வம் நீரே எனக்காக யாவையும் செய்வீர் – 2
3. ஊழியம் செய்ய என்னை இன்னும் உருவாக்கி மகிழ்கின்றீர் – 2 ஒருபோதும் கைவிட மாட்டீர் ஒருநாளும் விலகிட மாட்டீர் – 2
4. ஆவியின் அபிஷேகத்தால் நிரப்பி நடத்துகிறீர் – 2 வாக்குத்தத்தம் செய்தவரே வாக்கு மாறா வல்ல நேசரே – 2