ஜீவன் தந்த ஏசுவை மறந்து விடாதே
jeevan thandha esuvai marandhu vidaadhae
ஜீவன் தந்த ஏசுவை மறந்து விடாதே ஜீவிக்கிற கிறிஸ்துவை விட்டு விடாதே-2
நான் ஒரு பாவியாய் இருந்தேன் ஓர் நாள் என் பாவத்தை மன்னிக்க ஒருவரில்லை வியாதியின் படுக்கையில் இருந்தேன் அந்நாள் -2 என்னை சுகமாக்க ஒருவரில்லை-2
நான் விக்கிரக தோட்டத்தில் வாழ்ந்து வந்தேன் அவைகள் ஒன்றுக்கும் உயிர் இல்லையே பல பல தெய்வங்களை கும்பிட்டு பார்த்தேன்-2 தாயித்து குறி ஜோசியம் கேட்டு பார்த்தேன்-2
அதினாலே எனக்கு பலனில்லையே வியாதி பாவ மரண பயமும் பெருகிவந்நது இயேசுவே என்று அலறி கூப்பிட்டேன்-2 ஜீவனுள்ள ஆண்டவர் ஓடி வந்தாரே-2
சிலுவையின் காட்சியை தந்தார் இயேசு காட்சியை கண்டு நான் துவண்டு போனேன் நானே வழி ஜீவன் யோவான்-14:6 (2) உன் சிலுவை எடுத்து வா என்று சொன்னாரே-2