ஜீவன் ஈந்தாரல்லவோ
jeevan eendhaarallavo
ஜீவன் ஈந்தாரல்லவோ, மீட்க என்னையோ தேவ சுதனே!
1. ஆச்சரியமே! கேளும் தோழரே தேவ தேவனே தியாகமானாரே ஆ! அரிய தம் கிருபையால் தாம் எனை தேடி வந்தார் - ஜீவன்
2. கல்வாரியில் இக்காட்சி பாருமே கர்த்தர் இயேசுவே தொங்குகிறார் ஆ! எனது பாரதம் தாம் குருசில் சுமந்து தீர்த்தவர் - ஜீவன்
3. தேகம் முற்றுமே காயமுற்றவர்க தீர்க்க கோடும் நோயை முற்றிலும் சாபமதாலான பெரும் வாதைகளைத் தாமே தொலைத்தவர் - ஜீவன்
4. அன்பினாலே தம் மேன்மை வெறுத்தார் என்னை போலவே அணைத்தார் என்னையே ஆச்சரியமே பூவிலே காணாதோர் அரும் வினோதமே - ஜீவன்
5. என்ன செய்வேனோ என் இன்ப இயேசுக்காய்? இன்னும் தாழ்த்தியே வைப்பேன் சேவைக்காய் எந்நாளும் தம் தயவால் தாங்கியே அரவணைப்பவர் - ஜீவன்