ஜீவாதிபதி இயேசுவே
jeevaadhibadhi yesuvae
ஜீவாதிபதி இயேசுவே ஜீவனுள்ளோர் தேவா நீதியுள்ள கர்த்தாவே நித்திய கீர்த்தி உமக்கே
1. மேதினியில் நாங்கள் சேதமாகா நீதியின் கரத்தினால் தாங்கினீர் எளிமையும் ஏதுமில்லாதவர்க்கு எல்லாவற்றிற்கும் எல்லாமானீர்
2. தீவிரமாக வந்த உம் வார்த்தை தீர்த்ததென் வியாதி வேதனையை தீராத பாரத்தால் தளர்ந்த வேளை மாறாத கிருபையால் தாங்கினீர்
3. மாராவின் நீரை மதுரமாக்கி கானாவின் நீரை சுவையாக்கினீர் சகலமும் அதினதின் காலத்திலே நேர்த்தியாக நீர் செய்கிறீரே
4. சத்திய வேத வெளிச்சத்திலே நித்தமும் சீராய் நடந்திடுவோம் பகல் உள்ள காலம் முடிந்திடும் முன் பரமனின் கிரியை பிடித்திடுவோம்
5. கடைசி எக்காள தொனி கேட்க ஆயத்தமுள்ளோராய்க் காத்திருப்போம் உள்ளான மகிமையில் பூரணராய் உன்னதரோடொன்றாய்ச் சேர்ந்திடுவோம்