ஜீவ பலியாக ஒப்புவிக்கின்றேன்
jeeva paliyaaga oppuvikkindren
ஜீவ பலியாக ஒப்புவிக்கின்றேன் ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் இயேசுதேவா என் நேசா - 2 நுகர்ந்து முகர்ந்து மகிழும் ஐயா
1.என் சிந்தை பார்வை எல்லாம் உம்மை போல் மாற்றிடுவீர் என் கேள்வி வார்த்தையெல்லாம் தேவா உம் சாயலாக்கிடுவீர்
2.எண்ணங்கள் நடத்தைகளும் என் இயேசு போல் விளங்க செய்வீர் கிரியைகள் யாவற்றிலும் கிறிஸ்து வாசனையாயிருப்பீர்
3.உள்ளான மனிதனையே உன்னதர் சாயலாக்கும் புறம்பான மனிதனையே உம் நிரூபமாய் மாற்றி விடும்.
4.உன்னதரின் வருகையதில் உம் சாயல் எனில் காண்பீர் உம்மோடு அழைத்து செல்வீர் உம் அருகில் அமர செய்வீர்