ஜீவ நதியின் ஓரமாய் சீயோன்
jeeva nadhiyin oramaay seeyon
1. ஜீவ நதியின் ஓரமாய் சீயோன் பட்டணம் காணுது சீக்கிரமாய் சேரு அதற்கு என் உள்ளம் வாஞ்சிக்குது
நித்தியம் நித்தியம் நித்தியம் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் கொள்ளலாம்
2. பாவம் நிறைந்த உலகமே உன் பாக்கியம் எனக்கு வேண்டாமே கண்ணீர் நிறைந்த உலகமே உன் கஸ்தி எனக்கு வேண்டாமே
3. கெத்செமனே தோட்டத்தில் என் நேசர் சத்தம் கேட்குதே பெந்தெகொஸ்தின் ஆவியால் என் இதயம் நிரம்பி வழியுதே
4. போய் கோட்டையை தகர்த்த வீரன் போன பாதை தோணுதே சீயோன் மலையில் நேசரோடு வாழக் காலம் நெருங்குதே
5. ஆட்டுக்குட்டி யின் மகிமை காண ஆனந்தம் பரமானந்தம் மீட்கப்பட்ட வர் கூட்டம் சேர ஆ அது மிகப்பேரின்பம்