ஜீவ நதியண்டை போவோம்
jeeva nadhiyandai povom
1. ஜீவ நதியண்டை போவோம் சிங்காசனத் தூறுமே தேவ தூதர் நிற்பர் சேர்வோம் திரு நதி ஓரமே.
ஜீவ நதியண்டை சேர்வோம் நேர்த்தியாமே திவ்ய நேர்த்தியாமே பாவமற்ற தூயரைக் காண்போம் தேவ சந்நிதியிலே.
2. அந்த நதியின் அலைகள் மோதி வீசும் கரையில் எந்நாளும் உலாவி நாங்கள் பணிவோம் சந்தோஷத்தில்.
3. காந்தியான நதி போமுன் பாரம் யாவும் விட்டோய்வோம் ஆண்டவர் கிருபையாலே க்ரீடம் வெண்ணங்கி ரூடவ்வார்.
4. ரட்சகரின் சாயல் பார்ப்போம் ஜீவ நதி நீரினில் கீதம் பாடுவதைக் கேட்போம் களிப்போம் நம் ரட்சிப்பில்