ஜீவ ஜீவ நதியே
jeeva jeeva nadhiyae
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே - 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே - ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே - ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே - ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே - ஜீவ நதியே