ஜீவ ஞான இயேசு
jeeva gnaana yesu
ஜீவ ஞான இயேசு நாதரின் சேவடி பணிவோமே நாம்
ஜீவனை ஈந்த ஜீவாதிபதியே ஜீவிய நாளெல்லாம் பணிவுடனே நாம் - ஜீவ
1. வெள்ளம் போல வந்திட்ட அலையை விலக்கியே மீட்டீரே உள்ளம் போல் நேசித்தார் எமை குளம் நிறைந்த இப்பார்தல் மீதில் - ஜீவ
2. போஷிக்கும் கரம் ஆசிக்கும் கரம் புனிதா நீர் ஈந்திடும் - ஆ ஆ நேசிக்கும் எம்மில் உம் ஆனந்த மாரியை பாசமா யித்தினம் தந்து அளித்திடும் - ஜீவ
3. காதலனே நானிலம் தனிலேயும் தாசர்கள் ஓங்கிடவே - ஆ ஆ ஆர்வலன் உன் நன்மைகள் ஈந்து சீர்பாலனம் செய்திடுவாய் எம்மில் - ஜீவ
4. திங்களொளியே மங்கிடா மதியே தினமுமைத் துதித்திடவே- ஆ ஆ பங்கமில்லா உம் பாதத்தைத் தேட பாதகர் எமையே பரிசுத்தம் செய்தீர் - ஜீவ
5. காத்திராத தினமதில் நீரே கர்த்தரே வருவீரே - ஆ ஆ ஆவி ஆத்மா எம் மாமிச முற்றும் மாசற்றது மகிமையில் சேர்க்க - ஜீவ