ஜீவ தேவனை தினம் தொழுதிடுவோம்
jeeva devanai thinam thozhudhiduvom
ஜீவ தேவனை தினம் தொழுதிடுவோம் ஆவலுடன் அவர் அடியினைப் பணிவோம்- 2
ஆதியந்தமில்லா ஜோதி சொரூபனை - 2 மேதினியில் வந்த மேன்மை குமாரனை தீதில்லார் உள்ளத்திலிருந்திடும் அரூபனை -2 கோதில்லா தூயனை கீதங்களால் பாடி - ஜீவ
விண்டலத்தோர் புகழ் வீரப்பிரதாபனை -2 மண்டலத்தோர் புகழும் மனுக்குலத் தீபனை தொண்டர்க்காய் வேண்டிடும் மெய்யனுதாபனை -2 கொண்டாடிப் போற்றுவோம் மண்டலாதிபனை
கடல்மேல் நடந்தோனை காற்றைக் கடிந்தோனை -2 உடல்பிணி நீக்கி நல்லுபதேசம் செய்தோனை அடல்புரிந் தலகையின் ஆற்றல் அழித்தோனை -2 திடமனமுடனே நாம் தினம் தினம் தொழுவோம்
இக்குவலயம்தனில் இன்னல் அடைந்தோனை -2 மக்கள் மகிமையுற மரணத்தை யேற்றோனை எக்குலத் தோர்க்கும் நல் ரக்ஷிப்பை ஈந்தோனை -2 அக்களிப்புடனே நாம் அனுதினம் பணிவோம்
தீர்க்கர் முன் உரைத்திட்ட தெய்வவதாரனை -2 மூர்க்கர்கள் வதைத்திட்ட முடிவிலா வீரனை தூர்க்க நரகின்வழி ஒழித்திட்ட தீரனை -2 பார்க்கொண்ணா ஜோதியைப் பணிவுடன் வணங்குவோம்