ஜீவ அப்பமே ஜீவதிபதியே
jeeva appamae jeevadhibadhiyae
ஜீவ அப்பமே, ஜீவதிபதியே ஜீவனின் பெலனே -2 ருசிப்போம், புசிப்போம், மகிழ்வோம் நீர் நல்லவர், வல்லவரே -2
மன்னாதி மன்னவனே, பரலோக மன்னாவே - 2 மனதின் மகிழ்ச்சியே எந்தன் வாழ்வின் புகழ்ச்சியே -2
1. அன்பது இனிமை, பாசமே புதுமை பெருகுதே பேரின்பமே , பேதயர்க்கு என்றுமே -2 பேருலகில் யாவுமே, வீணாக தோன்றிடுதே பரலோகத்தின் பேரின்பத்தை, ருசிப்பெனே என்றுமே -2
2. தூதரின் உணவை உம் ஜனத்துக்கு கொடுத்தீர் கன்மலை நீரூற்றினால், தாகத்தை தீர்த்துவிட்டீர் -2 காடைகளைக் குவித்தீர், ஏராளமாய் கொடுத்தீர் பாதைஎல்லாம் பாலும், தேனும் பாய்ந்திட செய்திட்டீரே -2
3. ஜீவனை ஊற்றினீர், ரத்தத்தை சிந்தினீர் எனக்குள்ளே வாழ்ந்திடவே, ஒன்றறக் கலந்துவிட்டீர் -2 ஆலயமாக்கினீர், உள்ளத்தில் வாழ்கின்றீர் வாக்கடங்கா பெருமூச்சோடேபரிந்து பேசுகின்றீர் -2
4.. சீக்கிரம் வாருமே, வாஞ்சைகள் தீருமே ஜீவனின் ஊற்றண்டையில், ஜீவகனி புசிப்பேன் -2 ஜீவனில் பெருகியே, பூரனமடைந்திடுவேன் பொன்முகத்தின் சாயலினால் மருரூபமடைவேனே -2