ஜெபிப்போம் செயல்படுவோம்
jebippom seyalbaduvom
ஜெபிப்போம் செயல்படுவோம் இயேசுவின் நாமத்தை உயர்த்துவோம் -2 தேசத்தில் எழுப்புதல் அக்கினிகிறங்க தேவனை நோக்கிக் கதறிடுவோம் -2
உலகத்தை கலக்கும் மனிதர் எங்கே அக்கினி இறக்கும் தாசர் எங்கே -2 கர்த்தரே தெய்வம் மெய்யான தெய்வம் என்றுரைக்கும் நாட்கள் எங்கே -2
ஆதி அப்போஸ்தலர் நாள்களிலே நடந்த அற்புதம் கண்டிடவே -2 சபைகளில் உயிர்மீட்சி பெற்றிடவே ஒருமனதோடு ஜெபித்து விடுவோம் -2
ஜெபித்திட நேரம் செயல்படுவோம் செயல்படும் நேரம் ஜெபித்து விடுவோம் -2 கர்த்தருக்கென்றும் ஆகாதவர் காலத்தை அறிந்து ஜெபித்திடுவோம் -2