ஜெபம் கேளும் கிருபை தாருமே
jebam kelum kirubai thaarumae
ஜெபம் கேளும், கிருபை தாருமே, ஜெபம் கேளும்.
1. கண்களில் காண்பவை யாவும் அநித்தியம், காணப்படாதவை யாவுமே நித்தியம், கருத்துடன் உணர்ந்து கர்த்தனைப் பணிய உணர்வு உணர்வு தாருமே.
2. என் பெலன் யாவும் என்னை விட்டாலும், நின் பெலனில் யான் நிலைபெறச் செய்யும் வெண்மை நீர் தாரும் வல்லமையை தேவா! வன்மை வண்மை தாருமே
3. கையில் காசும் கண்டிடும் கனா போல வையக மீதினில் கை விட்டோடிடும் மெய்ப்பொருளும் நின் அருள் மகிழ. இருளை அருளைத் தரும்,
4. துன்பங்கள் சூழ, ஞானமும் மூழ்க, இன்பங்கள் மாற கண்ணீரும் ஊற்றி, உம் பரலோக ஞானம் பெற்று றவே ஞானம் ஞானம் தாருமே
5. அழகின் பெருமை அழிவை தான் தருமே, அணிந்திடும் அழகும் ஆக்கினையாமே, தேவ பக்தியாம் தேக சிங்காரம் பக்தி பக்தி தாருமே,
6. கர்த்தனே! உம்மில் கனிவுடன் மகிழ, கர்த்தர் நீரேற்ற சிலுவையைப் புகழ், கற்புடன் உய்தன் தொண்டு யார் புரிய கற்பு கற்பு தாருமே
7. ஈகிறேன், ஐயா! என்னை மெய்யாய் ஆத்துமா ஆவி தேகம் உமக்காய்: ஏற்றுக்கொள், ஐயா அன்புடன் உய்ய, அன்பு அன்பு தாருமே
8. மாம்ச சுபாவத்தை மனதார அழிக்க, திவ்விய சுபாவத்தை தீர்க்கமாய் தரிக்க , தூய! நின் வருகையில் தூய்மையாய் காண தூய்மை-தூய்மை தாருமே