ஜெப ஆவி அருளும்
jeba aavi arulum
ஜெப ஆவி அருளும் தேவா ஜெப தீபம் என்னிலும் எரித்திடவே ஜெப சிந்தை தாரும் தேவா ஜெயித்து நான் உம்மிடம் வீற்றிடவே
1 நொறுங்குண்ட இதயம் ஊற்றிடுவேன் நொருங்குண்ட ஆவியின் அமர்ந்திடுவேன் கருத்துடன் வேண்டுதல் செய்திட யான் திருப்பாதம் அனுதினம் அண்டிடுவேன்
2. இரத்தமும் வேர்வையாய் சீந்தினீரே கர்த்தா நீர் ஊக்கமாய் வேண்டுகையில் இராப்பகல் உம்மண்டை ஜெபித்திடுவேன் வரம் தர இயேசுவே இரங்கிடுவீர்!
3 விரும்பிடும் நன்மை நான் செய்திட கிருபையை நல்கிடும் என் தேவனே வெறுத்திடும் தீமையை வென்றிடவும் ஊற்றிடும் என்னிலும் ஜெப ஆவியை
4. மண்ணில் வாழ்ந்திடும் நாள் வரையும் கண்ணீரைத் தண்ணீரை ஊற்றிடுவேன் உன்னதா! உந்தன் மனமிரங்கி விண்ணப்பம் கேட்டென்னை ஆசீர்வதியும்
5. எக்காள நாதம் கேட்டிடவே விழித்துமே ஜெபித்து நான் காத்திருப்பேன் பழுதற்ற தூயா உம்மை சந்திக்க வழுவாமல் காப்பீர் உம் திருவடியில்