இயேசென்னும் நாமம் என்நாவுக்கு
iyesennum naamam ennaavukku
இயேசென்னும் நாமம் என்நாவுக்கு சுகிர்தம் நானிலம் தனில் என் அரணே - ஆ
தீருமென்குறைவும் தீதுகள் குறையும் தீருமென்திகிலும் உரைக்கவும் பெயரும்
சிந்தையின் பாரங்கள் யாவையும் நீக்கிடும் சஞ்சலம் யாவுமே அகற்றும் - ஆ பந்தனைஜெயித்துவந்தெனை அணைக்கும் பந்தனை அழித்து சந்தோஷம் அளிக்கும்
வெவ்வேறு பாஷையை பேசிடச் செய்திடும் வெவ்வெறு நாவினால் துதிக்க - ஆ வேந்தனே நமக்கு ஈந்ததும் இதுவே வேந்தனை அண்டினோர்க்காறுதல் இதுவே
பேய்களும் நீங்கும் பொல்லாவியும் அகன்றிடும் நோய் பிணி யாவுமே தொலையும் - ஆ அதிசயம் நடக்கும் அற்புதம் பெருகும் அதிசயர்பெயரும் என்றென்றும் ஜெயிக்கும்
ஆ என்ன இன்பம் என் ஆண்டவர் பெயரில் ஆனந்தமே அதன் நினைவில் - ஆ தேனிலும் இனிமை பேதைக்கு மகிமை தேனிலும் இனிமை ஏழைக்கும் உரிமை
வணங்குவார் யாவரும் வானிலும் பூவிலும் தொனித்திட இயேசுவின் நாமம் - ஆ மடங்குமே முழங்கால் அடங்குமே துடுக்கும் மடங்கும் எப்பெயரும் நடுங்குமே அவர்க்கு
பயங்கர சர்ப்பத்தைப் பயமின்றி எடுக்கவும் மயங்கிடும் நஞ்சை ஜெயிக்கவும் - ஆ தயங்கி நிற்பவரை தாங்கிடும் பெலனே தயங்கி வந்தவரை ஆற்றிடும் பெயரே