இயேசவின் நாமம் இனிதான
iyesavin naamam inidhaana
இயேசுவின் நாமம் இனிதான நாமம் இணையில்லா நாமம் இன்ப நாமம் பாவத்தை போக்கும் பயமதை நீக்கும் பரம் சந்தோஷம் பக்தருக்களிக்கும்
பரிமள தைலமாம் இயேசுவின் நாமம் பார் எங்கும் வாசனை வீசிடும் நாமம்
வானிலும் பூவிலும் மேலான நாமம் வானாதி வானவர் இயேசுவின் நாமம்
நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம் நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம் மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
சாத்தானின் சேனையை ஜெயித்திட்ட நாமம் சாபப் பிசாசை துரத்திடும் நாமம்