இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன்
iyesa nambithaan naan porandhirukken
இயேச நம்பித்தான் நான் பொறந்திருக்கேன் இயேசு நம்பித்தான் நான் வளர்ந்திருக்கேன் -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்ப வந்து வந்து கேட்குதம்மா -2
1. கண்ணில் தூசி பட்டால் என் இயேசு கதறி அழுதிடுவார் மண்ணில் நான் நடக்க என் இயேசு சொல்லிக் கொடுத்திடுவார் -2 வழிதவறி நடத்திட்ட ஆடு தனிமரமாய்த் தவிக்குது பாரு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2
2. சொந்தம் பிரிந்து விட்டால் என் இயேசு துயரம் துடைத்திடுவார் பந்தம் மறந்துவிட்டால் என் இயேசு பயத்தை விலக்கிடுவார் -2 மனம் கலங்கிக் கதறிட்டபோது கரம்பிடித்த கர்த்தரைப் பாடு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2
3. தாயின் குழந்தையைப்போல என் இயேசு தாங்கி நடத்திடுவார் நோயின் பலத்தையெல்லாம் என் இயேசு நொடியில் துரத்திடுவார் -2 என் நிலையை உயர்த்திய இயேசு அந்த உத்தமரை நீ பாடு -2 இயேசு சொன்ன சொல்லு காதோரமா இப்போ வந்து வந்து கேட்குதம்மா -2