இவ்வளவு நேசித்தால்
ivvalavu nesithaal
இவ்வளவு நேசித்தால் போதாது உம்மை இவ்வளவும் ஆராதித்தால் போதாது – 2 எனக்குள்ளதை விட என் ஜீவனை விட உம்மை நேசிப்பதே என் ஆசை – 2
இயேசுவே பாத்திரரே இயேசுவே பாத்திரரே – 2
1. என் வியாகுலங்கள் தீர்த்ததாலே அல்ல என் தேவைகள் நிறைவேற்றினத்தாலோ அல்ல – 2 எனக்காய் மரித்ததினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2
2. என் கிரியைகளோ செய்கைகளோ அல்ல என் காணிக்கைகள் பொருத்தனைகள் அல்ல – 2 கிருபையாலே மீட்டதினால் நான் என்றும் உம்மை ஆராதிப்பேனே – 2