இவன் பேரு யோனா
ivan peru yonaa
இவன் பேரு யோனா - சொல்லாமல் போனான் தர்வீசுக்கு கப்பல் ஏறினான் - தேவ சித்தத்திற்கு விலகி ஓடினான் ( 2 )
தனிமையாக அவன் தூங்கப் போனான் நினிவேதனை யோனா மறந்து போனான் ஏலே லோ ஏலே லோ ( 2 )
போனானே போனானே - அடித்தட்டில் அயர்ந்தே நித்திரை போனானே காணாமல் போனானோ - கர்த்தரின் பார்வையை கடந்து போவானோ
கடல் தனக்கதிகாரியாம் - கர்த்தரோ காற்றுக்குக் கட்டளையிட்டார் இடறலின் காரணமாம் யோனாவை எடுத்தே கடலில் எறிந்தனர்
சென்றானே சென்றாளே - மீனின் வயிற்றுக்குள் சென்றானே வென்றானே விண்ணப்பம் செய்து - வல்லவர் நல்ல கரை சேர்த்து விட்டாரே
நினிவேக்கு போனானே - யோனா கனிவில்லா மொழிகள் சொன்னானே தேசம் அழியும் என்றானே - தேவனின் பாசம் மறந்து சொன்னானே
போனானே போனானே - யோனா ஏமாந்து போனானே மனம் மாறி போனாரே - நினிவே மக்கள் மன்னிப்பும் பெற்றுக் கொண்டாரே