இத்தனை தயவு என்
ithanai thayavu en
இத்தனை தயவு என் பால் என் பரனே எத்தனை பாவமோ மன்னித்து மறந்தீர் இத்தனை தயவோ என்பால்
1. துன்ப மனமும் துரோகியின் சிந்தும் மூர்க்க உருவாய் பூவிலே வைத்தேன் உன்னதா நின் கிருபை எனக்கோ? அன்னையாயோ ஆதரீத்தீர்!
2. பாவி நான் பராபரா உம்மையே பாதகரால் வாதிக்கக் கொடுத்தேன் அன்பின் உருவே அறிய குருவே என்னையோ நீர் இறங்கி மீட்டீர்?
3. அன்பே இனியும் இனியும் தயவு என்றும் மாறா ஏழையானிருக்க மன்னா என்னை ஆண்டி அணைப்பீர் தாறேன் இனி என் ஆணை உமக்கே
4. தேவ தேவா! திரித்துவ மூவா! வேதனையோ ஏழைக்காய் சகித்தீர் தேசம் எங்கும் தேட உம்மையே தேகம் உருக வாதை அடைந்தார்
5. ஒன்றின் வாஞ்சை கேட்டிடுவீரே நின்னைப் போலப் பாடுகள் சகிக்க நின் முகத்தைக் காட்டும் எனக்கே நீடூழியாய்ப் பணிந்து துதிக்க