இஸ்ரவேலின் நாதனாக
isravelin naadhanaaga
இஸ்ரவேலின் நாதனாக வாழும் ஏக தெய்வம் சத்திய மார்க்கமான தெய்வம் மத்தியனாக பூமியில் பிறந்த ஸ்நேகா தெய்வம் நித்திய ஜீவன் தந்திடும் நல் தெய்வம்
அப்பா பிதாவே தெய்வமே உம் திரு ராஜ்யம் வருகவே உம் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறேவேற வேண்டுமே
யேகோவா ராஜாதி ராஜனே உமது ராஜ்ஜியம் வருகவே அன்பரின் திரு சித்தம் பூமியில் என்றென்றும் நிறைவேற வேண்டுமே
செங்கடலை பிளந்து பாதை கொடுத்தீர் வழியில் மக்கட்கு மன்னா பொழிந்தீர் எரிவெயிலில் மேகதலனானீர் (கொடும் வெயிலில் மேக குளிரானீர்) இருளில் சினேக தீபமாய் சீனாய் மாமலை சிகரமதில் நீதி பிரமாணங்கள் பகிர்ந்தீரே
மனிதனாய் பூமியில் அவதரித்தீர் மனுஷனை மீட்கவே ஜீவன் கொடுத்தீர் உம் வசனம் எனக்கு உணவாகும் இவ்வுலகத்தின் ஜீவனாய் வழியும் சத்தியமும் ஜீவன் நீரே உம் திருநாமம் உயர்த்துகிறோம்