இஸ்ரவேலை ஆசீர்வதிக்க
isravelai aaseervadhikka
இஸ்ரவேலை ஆசீர்வதிக்க தேவனுக்கு பிரியம் இடம் கொள்ளாமல் போகுமட்டும் ஆசீர்வதிப்பாரே - 2 வானத்தின் பலகணி திறந்தே நன்மையால் நிரப்புவார் பொய் சொல்ல அவர் மனிதரல்லவே மனம் மாறிடாரே - 2
1. ஆபிரகாமின் ஆசீர்வாதம் எங்கள் தலை மேலே எங்கள் தலை மேலே ஈசாக்கின் ஆசீர்வாதம் எங்கள் தலை மேலே எங்கள் தலை மேலே - 2 காலதாமதம் ஆனாலும் நாங்கள் முற்றிலும் சுதந்தரிப்போம் பஞ்ச காலம் வந்தாலும் நூறு மடங்காய் பெற்றிடுவோம் - 2 ஆசீர்வாத மழையில் நனைந்திடுவோம் ஆரோக்ய வாழ்வை பெற்றிடுவோம் - 2
2. யோசேப்பின் ஆசீர்வாதம் எங்கள் தலை மேலே எங்கள் தலை மேலே தானியேலின் ஆசீர்வாதம் எங்கள் தலை மேலே எங்கள் தலை மேலே - 2 ஏற்றக்காலத்தில் உயர்த்திடுவார் எம்மை தலைவர்களாக்கிடுவார் மறைபொருள்கள் யாவையும் தரிசனமாய் தந்திடுவார் - 2 எதிராளிகள் தாழ்த்தி உயர்த்திடுவார் நிலைவரமான ஆவியை தந்திடுவார் - 2