இஸ்ரவேல் என் ஜனமே என்றும்
isravel en janamae endrum
இஸ்ரவேல் என் ஜனமே என்றும் இடறிட வேண்டாம் யேகோவாஉன் தெய்வமானால் எதும் பயம் வேண்டாம்
ஓங்கும் புயமும் பலத்த கரமும் உன் பக்கமே உண்டு தாங்கும் கிருபை தயவு இரக்கம் தாராளமாய் உண்டு
பார்வோன் கைக்கு விடுவித்து மீட்ட பஸ்கா ஆட்டுக்குட்டி ஆரோன் மோசே என்னும் நல்ல ஆசாரியர் உண்டு
செங்கடலில் வழி திறந்த சீயோன் நாயகனே பங்கமின்றி பாலைவனத்தில் பராமரித்தாரே
சத்துருக்களை சிதற அடித்த சர்வவல்ல தேவன் யுத்தத்தில் உன் முன்னே சென்று ஜெயமெடுத்தாரே
பயப்படாதே சிறு மந்தையே பார் நான் உன் மேய்ப்பன் தயங்காதே மனம் கலங்காதே உன் தேவன் தினம் காப்பேன்