இசையோடு உறவாடும் என் இயேசுவே
isaiyodu uravaadum en yesuvae
இசையோடு உறவாடும் என் இயேசுவே தமிழ் அசையோடு நடமாடி வா... - 2 திசை எங்கும் உம் அன்பின் செயல்தானோ - 2 உயிர் அசைவதெல்லாம் உந்தன் அருள்தானோ - 2
பா உருவில் பாரில் பிறந்தாயோ - எந்தன் பாவத்தினை ஏற்க வந்தாயோ - 2 ஆவின் குடில்தனை தேர்ந்தாயோ - எம் - 2 அகத்தினை ஏற்றிட வாராயோ - 2.
மாசற்ற ரத்தத்தாலே மீட்டுக் கொண்டாய் - எந்தன் மாசினை நீக்கிட ஜீவன் தந்தாய் - 2 சத்தியம் வழியும் ஜீவனுமாய் - 2 - இந்த அகிலம் நிறைந்தவா காத்திடுவாய் - 2