இருந்தவரும் இருக்கிறவரும்
irundhavarum irukkiravarum
இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவன் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
1. தூதர்களோடு நான் பாடுவேன் மூப்பர்களின் சங்க சபையிலே – 2 சர்வ வல்ல தேவாதி தேவனை வணங்குவேன் சர்வ வல்ல அதிபதியை நான் போற்றுவேன்
2. அல்பா ஒமேகாவை பாடுவேன் எக்காள சத்தத்தோடு துதிப்பேனே – 2 சூரியன் போன்ற பிரகாச முகத்தையே நோக்குவேன் வெண்கல பாதம் உடையவரை நான் வணங்குவேன் (நம்புவேன்)
3. யூத கோத்திர சிங்கத்தை நான் பாடுவேன் மரணத்தை வென்றவரை துதிப்பேனே – 2 வச்சிர கல்லுக்கு ஒப்பானவரை நான் உயர்த்துவேன் பதுமராகம் போன்றவரை நான் புகழுவேன்
4. தாவீதின் வேரை நான் பாடுவேன் பரிசுத்தவான்களின் நடுவிலே – 2 சிருஷ்டி கர்த்தரில் எக்காளம் முழங்கி மகிழ்ந்திடுவேன் உயிரோடிருக்கும் ராஜாதி ராஜனை சேவிப்பேன்