இருளில் இருந்தேன் வெளிச்சம்
irulil irundhen veliccham
இருளில் இருந்தேன் வெளிச்சம் நான் கண்டேன் என் பாவத்தை மன்னித்த அன்பை நான் கண்டேன்
உம் இரக்கம் உயந்ததே உந்தன் அன்பு ஆழமானதே உம் கிருபை பெரியதே அது மிகவும் மிகவும் பெரியதே
இருளில் எந்தன் வெளிச்சமே என் பாதைக்கு நல்ல தீபமே வாழ்வில் ஒளியாய் வந்தவரே நீர் ஒருவரே என் இயேசுவே
காணாமல் போன ஆட்டை போல அலைந்தேன் திரிந்தேன் உலகிலே தேடி வந்தீர் மீட்டு கொண்டீர் என்னை சேர்த்து கொண்டீர்
குப்பைக்குள் கிடந்தேன், தூசியாய் இருந்தேன் குனிந்து என்னை தூக்கினீரே பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்தவரே