இருளான உலகத்திலே
irulaana ulagathilae
இருளான உலகத்திலே ஒளியாக வந்தாராம் உன்னையும் என்னையும் ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2
பாலகன் இயேசு பிறந்தாராம் தேவ குமாரன் வந்தாராம் இம்மானுவேல் இன்று பிறந்தாராம் இரட்சகர் இயேசு வந்தாராம்-2
1.மெய்யான ஒளியாய் பூமிக்கு இறங்கி வந்தாராம்-2 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன்
2.ஜீவ ஒளியாய் பூமிக்கு இறங்கி வந்தாராம்-2 மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்