இருள் தனில் அருள்
irul thanil arul
இருள் தனில் அருள் ஒளியாய் தோன்றினார்
1. பர விட்டு தரணியில் வர நிறைந்தவரே நர ரூபம் அணிந்தனர் மருள்வினை மாய்த்திட தளர்வு நீக்க மரணம் தனையே உவந்தார் - அதி
2. கருணையும் கிருபையும் இரக்கம் தாழ்மையுமே உருவாக்க அமைந்த இவர் அரூபியாய் இருந்தோர் சொரூபியாய் பிறந்தே அருவி போல் இடத்தில் வந்தார் - அதி
3. நரிக்குமோர் குழியுண்டே பறவைக்கோர் கூடுண்டே மரி மைந்தர்க் கிடமில்லையே பரிந்து ஏற்றிடவே அமிழ்ந்தோரை கரையே தெரிந்தனர் ஓர் குடிலே- அதி
4. திருமணயாகும் பரிசுத்த சபையதுவை நிறுத்த வேதம் முன்னிலை சந்தோஷமுடனே சகித்திட சிலுவை வந்தனர் விந்தையிதே - அதி
5. இவரே என் நாயகன் இவரே ஆயினும் இவரே இம்மானுவேலனே இவரே பணிந்தே புகழ் முடி சூட்டவே வருவீரே பரிசுத்தரே - அதி